இதுதொடர்பாக பாஜகவைச் சார்ந்த வழக்குரைஞர் அஸ்வத்தாமன் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், "கருப்பர் கூட்டம் எனும் யூ-டியூப் சேனலில் இந்துக் கடவுள்களை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் காணொலி பதிவிடப்படுகிறது.
மேலும் இந்துக்கள், இதிகாசங்கள், புராணங்களை அவமானப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. அதனால் அந்த சேனலின் நெறியாளர் சுரேந்திர நடராஜன் மற்றும் அத்துடன் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை விமர்சித்த பச்சைத் தமிழகம் கட்சியின் நிர்வாகி - பாஜகவினர் புகார்