சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரும் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அதற்குண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறவுள்ள அதே நாளில் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் குறித்து மனு தர்மத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தொகுப்பாக்கி மனு ஸ்மிருதி தொடர்பான 1 லட்சம் பிரதிகளை அச்சிட்டு, தமிழ்நாடு முழுவதும் வழங்கத்திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
-
நவ-6, ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களைஅச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் விநியோகம் செய்ய இருக்கிறோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
சூத்திரர்கள் & பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதைமட்டும் தொகுத்து இருக்கிறோம். நான் எழுதியிருக்கிற முன்னுரையுடன் 32பக்கங்கள் கொண்ட மனுஸ்மிருதிகள் தயாராகஇருக்கிறது pic.twitter.com/N2Q9jSwdKG
">நவ-6, ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களைஅச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் விநியோகம் செய்ய இருக்கிறோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 31, 2022
சூத்திரர்கள் & பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதைமட்டும் தொகுத்து இருக்கிறோம். நான் எழுதியிருக்கிற முன்னுரையுடன் 32பக்கங்கள் கொண்ட மனுஸ்மிருதிகள் தயாராகஇருக்கிறது pic.twitter.com/N2Q9jSwdKGநவ-6, ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களைஅச்சிட்டு மக்களுக்கு விலையில்லாமல் விநியோகம் செய்ய இருக்கிறோம்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 31, 2022
சூத்திரர்கள் & பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதைமட்டும் தொகுத்து இருக்கிறோம். நான் எழுதியிருக்கிற முன்னுரையுடன் 32பக்கங்கள் கொண்ட மனுஸ்மிருதிகள் தயாராகஇருக்கிறது pic.twitter.com/N2Q9jSwdKG
இந்நிலையில் தொல்.திருமாவளவனின் இச்செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ”உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை அனுமதியுடன் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சீர்குலைக்கும் வகையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவரின் செயல்பாடு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து மக்களிடம் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை அவர் எடுத்துச்செல்ல முயல்கிறார்.
ஆகையால், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க' வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனப்புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக பெண் நிர்வாகிகளை திமுக நிர்வாகி விமர்சித்த விவகாரம்!