ETV Bharat / state

மாமன்றத்திற்குள் 'இந்தி தெரியாது'... வெளியில் 'மேரா இந்தி மாலும்' - மாற்றி மாற்றி பேசிய பாஜக கவுன்சிலர் - பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்

சென்னை மாமன்றக் கூட்டத்தில் எனக்கு இந்தி தெரியாது என்று தெரிவித்துவிட்டு வெளியே வந்து தனக்கு இந்தி தெரியும், ஆனால் பிரச்னை வேண்டாம் என்று தான், தனக்கு இந்தி தெரியாது என்று கூட்ட அரங்கில் தெரிவித்தேன் என பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பேட்டி அளித்தார்.

பாஜக கவுன்சிலர்
பாஜக கவுன்சிலர்
author img

By

Published : Apr 9, 2022, 8:04 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று (ஏப்ரல் 9) தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றபின், சொந்த காரணங்கள் காரணமாக பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், கூட்டத்திலிருந்து வெளியேறி புறப்பட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என் முன்னோர்களுக்கு கோடி நமஸ்காரம், தில்லை அம்பலத்தான் கடவுளை வணங்கி தான் ஆரம்பிப்பேன். அந்த கடவுள் தான் வாக்காளர் மனதில் உள்ளே நுழைந்து எனக்கு வாக்களித்துள்ளார்.

மாமன்றம் கூட்டத்தில் அனைவரும் மரியாதையுடன் தான் நடந்து கொண்டார்கள். மத்திய அரசில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு நிர்பயா நிதி உதவி மற்றும் சுவச் பாரத் போன்ற மத்திய அரசு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. இதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பல நல்ல திட்டங்கள் தாளில் மட்டுமே உள்ளது. அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

எனக்கு இந்தி தெரியும்..ஆனால் பிரச்னை வேண்டாம்: ஆனால், ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் அவர்கள் வார்டில் என்ன திட்டங்கள் செய்தார்கள், எவ்வளவு காலத்தில் செய்தார்கள், முன்கூட்டியே முடித்தால் அவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிப்பது போல ஏதாவது சான்றிதழ் வழங்க வேண்டும். சிங்காரச் சென்னையாக மாற்றுவதைவிட பாதுகாப்பான (Safe) சென்னை ஆக இருக்க வேண்டும். வார்டு உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் கண்டிப்பாக வழங்க வேண்டும். இந்த வார்டு உறுப்பினர் ஊதியத்தை மத்திய, மாநில அரசுகள் பிரித்து வழங்க வேண்டும்.

அனைத்துக் கட்சிகளுக்கும் அவர்களுடைய சித்தாந்தம் மிகவும் முக்கியம். ஆனால், இன்று பட்ஜெட் நாள் என்பதால் நான் எதுவும் பிரச்னை வர வேண்டாம் என்று வந்துவிட்டேன். எனக்கு இந்தி தெரியும் ( mera Hindi maalum). ஆனால், வேண்டும் என்றே தான் பிரச்னை வேண்டாம் என்று எனக்கு இந்தி தெரியாது என்று மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தேன்" எனக் கூறினார்.

முன்னதாக சென்னை மாமன்ற கூட்டரங்கில் விவாதத்தின் போது, நமஸ்காரம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். அப்போது 'வணக்கம்...' என்று திமுக உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் சத்தமாக கூறினர்.

பின்னர், 'ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன்; மன்னித்து விடுங்கள்' என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறிய நிலையில், 'இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம்' என்று நகைச்சுவையாக திமுக உறுப்பினர்கள் கூறினர். அதற்கு 'எனக்கும் இந்தி தெரியாது' என்று உமா ஆனந்தன் பதிலளித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் கைதட்டி சிரிப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆங்கில அறிவில்லாமல் இந்தியை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் என்ன செய்யமுடியும்?' - பீட்டர் அல்போன்ஸ் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.