ETV Bharat / state

அமித் ஷா உடன் நள்ளிரவு வரை நீண்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - பின்னணி என்ன?

தொகுதிப் பங்கீடு இறுதி செய்து கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அமித் ஷா உடன் நள்ளிரவு வரை நீண்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - பின்னணி என்ன?

author img

By

Published : Mar 2, 2021, 9:01 AM IST

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நள்ளிரவு தாண்டி 3 மணி நேரத்திற்கு மேலாக தனியார் நட்சத்திர விடுதியில் நடத்துள்ளது. தேர்தல் தொகுதிப் பங்கீடு என்பதை தாண்டி சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டு வருவது பற்றியும், தொகுதி எண்ணிக்கை அதிகமாகவும் தர பாஜக சார்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியல் கட்சிகளின் சார்பில் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக பாஜகவிற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த அமித் ஷாவை காலையில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்பட்ட நிலையில் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை, இதனால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக காரைக்கால் புறப்பட்டு சென்றார்.

நேற்று இரவு 10 மணியளவில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனியார் நட்சத்திர விடுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

bjp Amit Shah admk seat allocation talks - what is the background?
அமித் ஷா உடன் நள்ளிரவு வரை நீண்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - பின்னணி என்ன?

இழுபறியின் பின்னணி என்ன ?

பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு, தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், தாங்கள் போட்டியிட விரும்பும் 30 தொகுதிகளை இறுதி செய்து தர பாஜக தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

அதிமுக அமைச்சர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் அதிமுக கோட்டையாக இருக்கும் ஒரு சில தொகுதிகளை குறிவைத்து காய்நகர்த்துவதால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ.கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரட்டை எண்ணிக்கையில் இருப்பார்கள் என தொடர்ந்து பாஜக தலைவர் முருகன் பேட்டி அளித்து வருகிறார்.

20 தொகுதி வரை அதிமுக தர முன்வந்துள்ளதாகவே அறியமுடிகிறது. ஆனால், பாஜக தரப்பிலோ 30 முதல் 40 தொகுதிகள் வரை கேட்கப்படுவதால் அதிமுக தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால் மட்டுமே போதிய எண்ணிக்கையிலான அதிமுகவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பாணியில் கூட்டணி ஆட்சி அல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க அதிமுக விரும்புகிறது.

சசிகலா - அதிமுக இணைப்பு விவாதம் ?

அதிமுகவை பொறுத்தவரை சசிகலா அல்லாமல் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருக்கிறது. அதே நேரம் பாஜக இரண்டு அணிகள் இணைப்பை விரும்புகிறது. தனியாக நின்றால் வாக்குகள் பிரிய அதிக வாய்ப்பு இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல் அல்லாமல் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் போட்டியிடவும் பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சசிகலாவை அதிமுக உடன் இணைப்பதை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இன்று அதிமுக அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அதிமுக நிர்வாகிகளுடன் தனது நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கட்சியில் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விலகி இருப்பது தான் நமக்கு நல்லது என பேசியுள்ளார்.

அதிமுகவின் இந்த முடிவால் பங்கீடு நீண்ட இழுபறி நீடிக்கிறது. தொகுதி பங்கீடு இறுதி செய்து கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை சீக்கிரமாக வெளியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விரைவில் பங்கீடு அறிவிப்பு...

விரைவில் பங்கீடு அறிவிப்பு...

தொகுதிகளை கண்டறியும் பணி சமரசம் ஏற்பட்ட உடன் தொகுதி பங்கீடு கையெழுத்து ஆகும் என தெரிகிறது. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் பிரதமர் தலைமையில் விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 3 ஆம் தேதியன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி, “தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில் உள்நோக்கம் கற்பிப்பது தவறு. சசிகலா இணைப்பு பற்றி எல்லாம் பேசவில்லை. யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்த அரசியல் சூழல் தொடர்பாக நம்மிடையே கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ராமஜெயம்,“ பாஜக தேசிய கட்சி என்பதால் பேர வலிமையை காட்டுகிறது. முடிந்தளவு அதிமுகவிடமிருந்து தொகுதிகளை அதிகளவில் வாங்க முயற்சி செய்கிறது. கூட்டணி வலிமையை அதிகப்படுத்தவதற்காக சசிகலா இணைப்பை விரும்புகிறது. இதில் அதிமுக முடிவு என்ன என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்” என கூறினார்.

தேர்தலில் தங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை பெற்றுகொள்ள போவது அரசியல் சாணக்கியர் அமித்ஷா வா ? இல்லை ஆளுமை நிரூபிக்க போராடும் எடப்பாடியா ? என்பது ஒரு சில நாள்களில் தெரியவரும்.

இதையும் படிங்க : தேர்தல் உலா-2021: நட்சத்திரத் தொகுதிகள் - கொளத்தூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.