ETV Bharat / state

பாஜக கூட்டணி வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது- திமுக குற்றச்சாட்டு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன்

பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அரசு இயந்திரமான வருமானவரித்துறை தவறாக பயன்படுத்தி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றன என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

BJP alliance misuses income tax - DMK
BJP alliance misuses income tax - DMK
author img

By

Published : Apr 2, 2021, 3:30 PM IST

Updated : Apr 2, 2021, 5:17 PM IST

சென்னை: திமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்ட நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலரிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் வீடு மற்றும் திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். ஆனால் இந்தச் சோதனையை ஒரு மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வருமான வரித்துறையினர் நடத்தாமல், தேர்தலுக்கு நான்கு நாள்கள் இருக்கும்போது நடத்துவது பாஜக, அதிமுக அரசுகளின் தூண்டுதலின் பெயரில் உள் நோக்கத்துடன் நடப்பதாகவே தெரிகிறது.

இது தேர்தல் விதிமீறல். பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமான வரி சோதனை நடத்துகிறது. இதன் மூலம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் முயற்சியை எடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம்.

பாஜக கூட்டணி வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது

பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அரசு இயந்திரமான வருமானவரித்துறை தவறாக பயன்படுத்தி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றன. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளது. திமுக இந்த வருமான வரி சோதனையைக் கண்டு அச்சம் கொள்ளாது. திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்.

Last Updated : Apr 2, 2021, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.