சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாளை மறுநாள் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளோம்.
தமிழ்நாட்டில் 15 மாவட்ட தலைமையகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாநில தலைவர் குறித்த அறிவிப்பை தேசிய தலைமை வெளியிடும். பெண் தலைவராக இருந்தாலும் ஆண் தலைவராக இருந்தாலும் அதை தேசிய தலைமை அறிவிக்கும்.
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ளது அதில் பாஜகவும் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ''நாட்டிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்'' - அமைச்சர் செங்கோட்டையன்!