ETV Bharat / state

2023-2024ஆம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 10:44 PM IST

Bird Census in Tamil Nadu: தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2023-2024ஆம் ஆண்டில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு QR ஸ்கேன் குறியீட்டை வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2023-2024ஆம் ஆண்டில் கலந்து கொள்ள தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்துக்கான கியூஆர் ஸ்கேன் குறியீட்டையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடம்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2023-2024ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர்ப் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதில், நீர்ப் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 2 மற்றும் 3 தேதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால், நீர்ப் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக ஒரு கோட்டத்திற்கு குறைந்தது 25 இடங்கள் வீதமும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக ஒரு கோட்டத்திற்கு குறைந்தது 25 இடங்கள் வீதமும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், பறவைகள் கணக்கெடுப்பானது தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதால், இதில் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்க விரும்பினால், அவர்கள் கணக்கெடுப்புக்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து” கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு ரூ.2976.10 கோடி வரி பகிர்வு - மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.