சென்னை பாதுகாப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிப்புரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் நேற்றிரவு தனது பணியை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் வடபழனி 100அடி சாலை வழியாக வந்துள்ளார். அப்போது அவ்வழியே மூன்று பேர் குடிப்போதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இந்நிலையில் எதிரே வந்த மகாலட்சுமியின் வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மகாலட்சுமிக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மகாலட்சுமியை அருகே இருந்த பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய பிரகாஷ், விஜய், புருசோத்தமன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு துறையினர் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.