அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகநாகனாக நடிக்கும் 'பிகில்' திரைப்படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மேலும், சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லியிருக்கிறேன். தன்னுடைய கதையை மையமாக வைத்தே ‘பிகில்’ படத்திற்கான கதை உருவாக்கப்பட்டுள்ளதால் திரைக்கு வர உள்ள ‘பிகில்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லிக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை (அக்.16) ஒத்திவைத்தார்.
இதையும் வாசிங்க: #BIGILFootballTournament: கால்பந்தாட்ட தொடர் நடத்தும் 'பிகில்' படக்குழு - எப்போ...எங்கே...?