ETV Bharat / state

தமிழ்நாடு காவல்துறையில் மெகா டிரான்ஸ்பர்?

author img

By

Published : May 7, 2022, 11:40 AM IST

Updated : May 7, 2022, 7:04 PM IST

ஈடிவி பாரத் செய்தி வெளியிட்ட நிலையில் 91 ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பி. பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெகா டிரான்ஸ்பர் காத்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

காவல்துறை
காவல்துறை

என்ன சாலமன் இது இவ்வளவு பெரிய கேக் பாக்ஸ் ! உங்களுக்கு இன்னைக்கு எதுவும் பிறந்தநாளா ? அட ஏன் சார் நீங்க வேற கடந்த வாரம் நாம ஒரு நியூஸ் போட்டிருந்தோம் நியாபகம் இருக்கா ”சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலனு”.......

ஆமா... தமிழ்நாடு காவல்துறையில் ஆய்வாளர்களாக பணியாற்றும் 91 பேருக்கு கடந்த மாதம் மார்ச் மாதம் 14ஆம் தேதி டி.எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, ஒருமாதம் 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வோ பணியிடமோ ஒதுக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவிக்கிறாங்கனு கொடுத்த செய்திதானே அதுக்கு என்ன இப்ப ?

நாம சொன்னபடியே நேற்று நடந்ததால, அதுல சம்மந்தப்பட்ட ஒரு ஆய்வாளர் காலையிலேயே வீட்டுக்கு வந்து கேக்கை கையில திணிச்சுட்டு போயிட்டாரு. வீட்ல வெகேஷனுக்கு ஊருக்கு போனதால கேக்க ஆபிஸ்க்கு கொண்டு வந்துட்டேன். அட்டண்டரை விட்டு எல்லோருக்கும் கொடுக்க சொல்லிடுங்க நான் இன்னொரு ரவுண்டு டிஜிபி ஆபிஸ் பக்கம் போயிட்டு வர்றேன். போயிட்டு சும்மா வரக்கூடாது ஏதாவது தகவலோட வரணும் உத்தரவு அய்யா....

என்ன சாலமன் ஏதாவது முக்கிய செய்தி கிடைச்சதா ? இல்லாமல அய்யா, முதல்ல சட்டம் ஒழுங்கு டிஜிபியும், சிபிசிஐடி டிஜிபியும் முதலமைச்சரை சந்திச்ச விஷயத்தை சொல்லிடுறேன். தொடர்ந்து ஆளுநர் மீது இருக்கும் அதிருப்தி பற்றி பேச்சு நடந்திருக்கு அப்புறம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா குறித்து ஆளுநர் பேசியது பற்றி அலோசனை செய்துருக்காரு, அப்புறம் லாக் அப் டெத் பத்தி விரக்தியா பேசினாராம் முதலமைச்சர்.

அதுக்கு காவல்துறையில் காலியா இருக்குற 18 ஆயிரம் போஸ்டிங்கை உடனே நிரப்பணும்னு சொல்லியிருக்காங்க. படிப்படியாதான் செய்ய முடியும் இப்ப நடக்க வேண்டியதை சொல்லுங்க என சொல்ல, கிட்டத்தட்ட 500 ஆய்வாளர்கள் பணிமாறுதல் வேண்டி மனு கொடுத்திருப்பதாக சொல்லியிருக்காரு சட்டம் ஒழுங்கு டிஜிபி. குடும்பத்தை விட்டு அவர்கள் தனிமையில் இருப்பதால் இப்படி பணியில் தங்கள் கோபத்தை காட்டுறாங்க. அதனாலகூட பல பிரச்சனைகள் எழ வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.

அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்ட முதலமைச்சர் இதற்கு உடனடியாக தீர்வு காண உத்தரவு போட்டுட்டாராம். ஆகவே காவல்துறையில் பணியாற்றும் ஆய்வாளர்கள் பலருடைய கோரிக்கை வரும் வாரத்தில் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக சொல்றாங்க அய்யா. இதுவரை இல்லாத மெகா டிரான்ஸ்பர் லிஸ்டா இது இருக்குமாம். அப்படினா அடுத்த வாரமும் கேக் உண்டு அப்படிதானே! உங்களுக்கு கேக் முக்கியமா தகவல் முக்கியமா என செல்லமாக கோபித்துக்கொண்டு நடையை கட்டினார் சாலமன்.

இதையும் படியுங்க... சாமி வரம் கொடுத்தாச்சு பூசாரி..? காத்திருக்கும் காக்கிகள்

Last Updated : May 7, 2022, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.