ETV Bharat / state

'சாவர்க்கருக்கு பாரத ரத்னா... விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை...!' - மே 17 இயக்கம்

சென்னை: சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது விடுதலைப் போராட்ட வீரர்களை அவமரியாதை செய்வது போல் அமையும் என திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி
author img

By

Published : Oct 22, 2019, 6:30 PM IST

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2018இல் தமிழ் ஈழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக இந்த அரசு எங்கள் மீதும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதிமுக அரசே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இப்படியிருக்கும்போது இந்தப் பிரச்னை சம்பந்தமாக நினைவேந்தல் நடத்தும்போது அவர்களே வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். அதேபோல் இந்த அரசு தமிழீழ உணர்வாளர்கள், தமிழர் உரிமைக்காகப் பாடுபடுவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடர்ச்சியாகப் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

அதுமட்டுமின்றி இங்கிருக்ககூடிய முற்போக்கு அமைப்புகள் நடத்தும் மாநாடு, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதற்காக ஏற்பாடுகளெல்லாம் நடந்துமுடிந்த பிறகு அனுமதி ரத்து செய்வதையே ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு மீத்தேன் எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாட்டை ரத்து செய்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாங்கள் தமிழரின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

செய்தியாளர்களைச் சந்திக்கும் திருமுருகன் காந்தி

அந்தவகையில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு சாதி ஒழிப்பு மாநாடு, நீலச்சட்டை பேரணியை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பாகிய நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். தமிழர்களின் உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக்காவும் தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவினுடைய தந்தையாக அறிவிக்கப்படும் மகாத்மா காந்தியடிகளை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சாவர்க்கர். சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதன் மூலமாக தங்களுடைய இந்துத்துவ பயங்கரவாதக் கொள்கையை அம்பலப்படுத்தி உள்ளது பாஜக அரசு. தேசப்பிதாவின் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்கமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆங்கிலேயரின் பல்வேறு நடவடிக்கைக்கு துணையாக நின்றவர் சாவர்க்கர். முக்கியமாக சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேய அரசின் மீது படையெடுக்க வருகின்றபோது அவருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய இளைஞர்களை வைத்து படை திரட்டியவர் சாவர்க்கர். அவ்வாறு சுபாஷ் சந்திரபோஸின் படையை வீழ்த்தக் காரணமாக இருந்தவர் இந்த சாவர்க்கர். இப்பேற்பட்ட பல வரலாற்று துரோகங்களுக்கு சொந்தமான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதென்பது இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக போரிட்டவர்களுக்கு அவமரியாதையாக இருந்துவிடும்.

மத்திய பாஜக அரசு எழுவர் விடுதலையில் தொடர்ச்சியாக துரோகம் செய்துவருகிறது. இங்கிருக்கும் பாஜகவின் பிரமுகரான ஆளுநர், எழுவர் விடுதலையை தடுத்து வைத்திருப்பது அரசியல் சாசன விரோதம். அதுமட்டுமின்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக இருக்கின்றது. ஏழு பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈஷாவின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த விவசாய சங்கம்!

Intro:Body:ஈழ தமிழருக்கு நினைவேந்தல் நடத்திய வழக்கில் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை எழும்பூரிலுள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார்.

பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர், " 2018 இல் தமிழ் ஈய இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக இந்த அரசு எங்கள் மீது, ஐயா வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளது. தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க. அரசே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்படியிருக்கும் போது இந்த பிரச்னை சம்பந்தமாக நினைவேந்தல் நடத்தும்போது அவர்களே வழக்குகளை பதிவு செய்கின்றனர். அதேபோல் இந்த அரசு தமிழீழ உணர்வாளர்கள், தமிழர் உரிமைக்காக பாடுபடுவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

அதுமட்டுமின்றி இங்கிருக்ககூடிய முற்போக்கு அமைப்புகள் நடத்தும் மாநாட்டிற்கு, ஆர்ப்பாட்டங்ளுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதற்காக ஏற்பாடுகளெல்லாம் நடந்துமுடிந்த பிறகு அனுமதி ரத்து செய்வதையே ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு மீத்தேன் எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாட்டை ரத்து செய்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாங்கள் தமிழரின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துகொண்டே இருப்போம்.

அந்தவகையில் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு சாதி ஒழிப்பு மாநாடு மற்றும் நீலச்சட்டை பேரணியை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பாகிய நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். தமிழர்களின் உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக்காவும் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்பதை அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

இந்தியாவினுடைய தந்தையாக அறிவிக்கப்படும் மகாத்மா காந்தியடிகளை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சாவர்கர். சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதன் மூலமாக தங்களுடைய இந்துத்துவ பயங்கரவாத கொள்கையை அம்பலப்படுத்தி உள்ளது. தேசப்பிதாவின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்கமுடியும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆங்கிலேயரின் பல்வேறு நடவடிக்கைக்கு துணையாக நின்றவர் சாவர்கர். முக்கியமாக சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது படையெடுத்த வருகின்ற போது அவருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய இளைஞர்களை வைத்து படை திரட்டியவர் சாவர்கர். அவ்வாறு சுபாஷ் சந்திர போஸின் படையை வீழ்த்த காரணமாக இருந்தவர் இந்த சாவர்கர். இப்பேற்பட்ட பல வரலாற்று துரோகங்களுக்கு சொந்தமான சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதெபது இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக போரிட்டவர்களுக்கு அவமரியாதையாக இருந்துவிடும்.

மத்திய பா.ஜ.க. அரசு எழுவர் விடுதலையில் தொடர்ச்சியாக துரோகம் செய்து வருகிறது. இங்கிருக்கும் பா.ஜ.க. வின் பிரமுகரான ஆளுநர் அவர்கள் எழுவர் விடுதலையை தடுத்து வைத்திருப்பது என்பது அரசியல் சாசன விரோதம். அதுமட்டுமின்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாகா இருக்கின்றது. ஏழு பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.