ETV Bharat / state

சென்னையில் Oppenheimer படம்‌ பார்க்க சிறந்த தியேட்டர் எது? ஒரு சிறப்புப் பார்வை! - oppenheimer in tamil

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள ஓப்பன்ஹெய்மர் படத்தினை பார்க்க சென்னையின் சிறந்த திரையரங்கு எது? ஈடிவி பாரத்தின் ஒரு சிறப்புப் பார்வை...

Best theater to watch Oppenheimer
Best theater to watch Oppenheimer
author img

By

Published : Jul 20, 2023, 4:27 PM IST

Updated : Jul 20, 2023, 6:01 PM IST

சென்னை: உலகளவில் தொழில்நுட்பம் என்பது‌ எத்தனையோ கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.‌ அதே தொழில்நுட்பம் திரைத்துறையிலும் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. நாம் இன்னமும் ஆரம்பகட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே திணறி வரும் சூழலில் ஹாலிவுட்டில் தொழில்நுட்பத்தில் எங்கேயோ சென்றுகொண்டு இருக்கின்றனர்.

யார் இந்த கிரிஸ்டோபர் நோலன்: புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் (Christoper Nolan) இயக்கி, நாளை வெளியாக உள்ள ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) படம். இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் யார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவரது படங்களே அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை சொல்லும். டைட்டானிக் (Titanic) கதாநாயகன் லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) நடிப்பில் வெளியான 'இன்ஷெப்சன்' (Inception), 'பேட்மென் பிகின்ஸ்' (Batman Begins) , இன்டர்ஸ்டெல்லர் (Interstellar), டன்கிரிக் (Dunkrik) போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

IMAX theater
IMAX theater

தான் இயக்கிய 'டென்னட்' (Tenet) என்ற படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பை மும்பையில் எடுத்தார். இப்படி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தனது அடுத்த படத்தை ஒரு பயோபிக்காக எடுத்துள்ளார். அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஜெ. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் (J. Robert Oppenheimer) என்பவரின் வாழ்க்கை மற்றும் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றி படமாக ஓப்பன்ஹெய்மர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கிராபிக்ஸை விரும்பாத நோலன்: பெரும்பாலும் தனது படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை விரும்பாத நோலன் இப்படத்தை எப்படி எடுத்திருப்பார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும், அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan), தனது திரைப்படங்களை IMAX-ன் பிரத்யேக கேமராவின் மூலம் படம் பிடிப்பார். அதேபோல் இந்த படமும் IMAX-ன் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அசல் அனுபவம் வேண்டுமெனில் IMAX திரையரங்குகளில் பார்க்க வேண்டுமென நோலனின் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த மாதம் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

அது என்ன IMAX?: இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம். ஐமேக்ஸ் என்றால் என்ன? சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்குகள் இருக்கிறதா என்று‌ பார்க்கலாம். ஐமேக்ஸ் என்றால் இமேஜ் மேக்ஸிமம் என்று பொருள் (Image maximum). சாதாரணமாக தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் 35மிமி பார்மேட்டில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால், இதில் 15/700 பார்மெட்டில் எடுக்கப்படுகின்றன. இதனால் ஐமேக்ஸ் 70 மிமி திரையில் படத்தைப் பார்க்கும்போது மிக பிரமாண்டமாக இருக்கும்.

IMAX theater
IMAX theater

இதற்காகவே பிரத்யேகமான ஐமேக்ஸ் புரொஜக்டரும் உள்ளன. ஐமேக்ஸ் ஸ்கிரீன் 16 மீ உயரம், 22 மீ அகலம் இருக்கும். இந்த அளவு ஒவ்வொரு நாட்டில் உள்ள திரையரங்குகளில் மாறுபடும். நம்மூரில் உள்ள சாதாரண திரையரங்குகளில் இருக்கும் திரைகளை விட ஐமேக்ஸ் திரையரங்கில் இருக்கும் திரை மிக பிரமாண்டமாக இருக்கும். அவை மேலிருந்து கீழ் வளைந்து இருக்கும், இதனால் படம் பார்க்கும்போது பார்வை திரையை விட்டு விலகாது.

IMAX-ல் என்ன ஸ்பெஷல்: ஐமேக்ஸ் திரையரங்கில், படத்தின் பின்னணி ஓசைகள் மிக துல்லியமாக இருக்கும். படம் ஓடும்போது தனியாக ஆடியோவை பிளே செய்வார்கள், இதனால் துல்லியமான ஆடியோ நமக்கு கேட்கும். ஓப்பன்ஹெய்மர் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளதால் இதனை ஐமேக்ஸ் திரையில் பார்க்கும் போது பிரமாண்டத்தின் உச்சிக்கே ரசிகர்கள் சென்று விடுவார்கள். சாதாரண திரையரங்குகளில் உள்ள தொழில்நுட்பங்களை விட ஐமேக்ஸ் திரையரங்குகளில் உள்ள தொழில்நுட்பங்கள் வேறுபட்டு இருக்கும். படத்தை மிக துல்லியமாக வழங்க சிறந்த லென்ஸ்களும் பயன்படுத்தப்படும்.

சென்னையில் IMAX எங்க இருக்கு?: சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்குகள் இருக்கிறதா? இருக்குங்க.. சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் (Phoenix Mall) ஐமேக்ஸ் திரையரங்கு உள்ளது. அதேபோல் ஃபோரம் மாலிலும் உள்ளது (தற்போது நெக்சஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படத்தை இந்த திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.‌

IMAX theater
IMAX theater

இதனால் படத்துக்கான டிக்கெட் அடுத்த பத்து நாட்களுக்கு ஃபுல் ஆகி விட்டது. நீங்கள் நல்ல ஒரு சினிமா அனுபவத்தை ஒருமுறையாவது அனுபவிக்க விரும்பினால் ஐமேக்ஸ் திரையரங்கில் படம்‌ பாருங்கள். நிச்சயம் அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்? - அவர் கூறுவது என்ன?

Last Updated : Jul 20, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.