ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் சுசீந்திரன் ஒரு இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் சினிமாவின் தமிழ் மண்ணின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள், மண்வாசனை, முதல் மரியாதை, கருத்தம்மா இப்படி ஏராளமான படைப்புகளை பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றி நமக்கு கொடுத்துள்ளார்.
அவருடைய இழப்பு ஈடுசெய்ய இயலாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் அவரது நண்பர்களுக்கும், உதவியாளர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா: எம்எல்ஏ பழனியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!