தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகமும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தென்மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகமும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
வருகின்ற நவம்பர் மாதத்தில் சிஏ பவுண்டேஷன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டமிட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு ஆன்லைன் மூலம் இந்த வகுப்புகள் வழங்கப்படவுள்ளன. ஜூன் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை, 6 நாள்கள் காலை 8 மணியிலிருந்து 11.15 மணி வரையிலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8.15மணி வரையிலும் வகுப்புகள் நடக்கின்றன.
சிஏ பவுண்டேசன் பாடத்திட்டத்துக்கு www.icai.org/ www.sircoficai.org/aspire இணையத்தில் பதிவு செய்து, வருகின்ற நவம்பரில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். இந்த வசதியை பெறுவதற்கு மாணவர்கள் தங்களது பெயர், தந்தை பெயர், வசிக்கும் ஊர், பிறந்த தேதி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அரசுப் பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் (அல்லது) 12ஆம் வகுப்பு தேர்வின் ஹால் டிக்கட் (ஸ்கேன் செய்து ) sircclasses@icai.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 8220522669, 9176826789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். பட்டயக் கணக்காளர் ஆகவேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் கொண்டவர்கள் https://sircoficai.org/aspire என்ற எங்களது இணைய தளத்தினை அணுகி பயன்பெறலாம். தனியார் பள்ளி மாணவர்கள் https://bit.ly/3dZLX80 என்ற லிங்க் மூலம் 9 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசையாகக் கட்டிய வீட்டை பார்க்க முடியாமல் நாட்டிற்காக உயிர்நீத்த பழனி; கதறும் குடும்பம்