சென்னை: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுக் கலந்தாய்வு நாளை(அக்.7) முதல் வரும் 28 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது எனவும், இக்கலந்தாய்விற்கு 1 லட்சத்து 10,873 மாணவர்கள் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வும், நாளை முதல் வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,533 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர மொத்தம் காலியாக உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்று இருந்தனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
அதில் விளையாட்டு பிரிவில் 277 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 122 பேரும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 98 மாணவர்களும் என, 497 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிறப்பு பிரிவினருக்கான 7,150 இடங்களில் 6,653 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், பொதுக் கலந்தாய்வு நடைபெறும் தேதி, கட்டணம் செலுத்துவதற்கான நாட்கள், விரும்பும் இடங்களை பதிவு செய்வதற்கான தேதி, தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படும் நாட்கள், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் நாட்கள் உள்ளிட்டவிபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுக் கலந்தாய்வில் முதல் சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 199.75 முதல் 175 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 12,263 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் கட்டணங்களை செலுத்தவும், 12,13 ஆகிய தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். அக்டோபர் 14 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அக்டோபர் 14,15 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னர், 16 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. இரண்டாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 174.75 முதல் 145,5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 22,904 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் கட்டணங்களை செலுத்தவும், 16,17ஆகிய தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப் பிரிவினை பதிவு செய்யலாம்.
18 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 18,19 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னர், 20 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. 3 வது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 145 முதல் 111,75 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 35,132 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் கட்டணங்களை செலுத்தவும், 20,21 ஆகிய தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். 22 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 22,23 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னர், 24 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது.
நான்காவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 111.5 முதல் 77.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 40,572 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் கட்டணங்களை செலுத்தவும், 24,25 ஆகிய தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். 26 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 26,27ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னர், 28 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி பாடப்பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 196.83 முதல் 87.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 1,533 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் கட்டணங்களை செலுத்தவும், 12,13 ஆகிய தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். 14 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 14,15 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை மாணவர்கள் உறுதி செய்த பின்னர், 16 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.