சென்னை: நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 440 கல்லூரிகள் எவை, பாடப்பிரிவு வாரியாக உள்ள இடங்களின் விவரம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

https://www.annauniv.edu/cai என்ற இணையத்தில் ஒவ்வொரு கல்லூரி குறித்த விவரத்தையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு இடஒதுக்கீடு - முதலமைச்சர் சேர்க்கை ஆணை வழங்குகிறார்