ETV Bharat / state

5 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்படும்...! - அமைச்சர் அன்பில் மகேஷ்

5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கவிருப்பதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

5 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்படும்...! - அன்பில் மகேஷ்

author img

By

Published : Oct 12, 2022, 9:04 AM IST

வேலூர்: தமிழ்நாட்டில் நடப்புக்கல்வி ஆண்டில் கல்வி பயிலாத சுமார் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் நேற்று (11.10.2022) மாலை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில்,
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மாநிலப்பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், ”தமிழ்நாட்டில் நடப்புக்கல்வி ஆண்டில் சுமார் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக்கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 9 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத்தெரியாத அனைவரையும் கண்டறிந்தும், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் உதவியுடன் முற்றிலும் எழுத மற்றும் படிக்கத்தெரியாத பெற்றோர்கள், உறவினர்களைக்கண்டறிந்தும் அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் குடியிருப்புப்பகுதியில் உள்ள எழுதப்படிக்கத்தெரியாத கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவு புகுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் கல்வி பயிலாத 3 லட்சம் பேரைக் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டுக்குள் கல்வி கற்றவர்களின் விழுக்காட்டில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 800 பேர் கல்வி பெறாமல் உள்ளனர். அவர்களுக்குப் பயிற்சி அளித்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு கல்வியில் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

வயதானவர்கள் கல்வி அறிவு இல்லாத காரணத்தினால் பலரால் ஏமாற்றப்படுகின்றனர். அதனைத்தடுக்கவே தமிழ்நாடு அரசு பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலம் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு பள்ளி செல்லாத அனைவருக்கும் கல்வி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

5 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்படும்...! - அமைச்சர் அன்பில் மகேஷ்

15 வயதுக்கு மேற்பட்டோருக்கு எழுத்தறிவு கற்பிப்பதை சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டாக ஆசிரியர்கள் கருதி செயல்பட வேண்டும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் உள்படப் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: சங்பரிவார் கும்பலின் சதி அரசியலை முறியடிப்பதற்கான ஒரு ஒத்திகையே இந்த அறப்போர் - தொல் திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.