ETV Bharat / state

பார் கவுன்சில் தலைவருக்கான தேர்தல்!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

Bar council president election
author img

By

Published : Jul 29, 2019, 2:07 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் 25 நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடைபெற்றது. 198 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக 22 புகார்கள் வந்த நிலையில், உரிய தீர்வு வரும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் கடந்த ஒரு ஆண்டாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து, அகில இந்திய தீர்ப்பாயம் 22 புகார்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பால் கனகராஜ், அமல்ராஜ், பிரபாகரன் உள்ளிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 25 பேரில் தலைவர், துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதில் தலைவர் பதவிக்கு ஆர்.சி.பால்கனகராஜ், அமல்ராஜ் ஆகியோரும், துணைத் தலைவர் பதவிக்கு சிவசுப்ரமணியன், வேல்முருகன், கார்த்திகேயன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

Intro:Body:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை நடைபெறுகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் 25 நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28 ம் தேதி நடைபெற்றது.

198 பேர் போட்டியிட்ட இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக 22 புகார்கள் வந்த நிலையில், உரிய தீர்வு கண்ட் பிறகே முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால் கடந்த 1 ஆண்டாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், அகில இந்திய தீர்ப்பாயம் 22 புகார்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த தேர்தலில் போட்டியிட்ட பால் கனகராஜ், அமல்ராஜ், பிரபாகரன், விடுதலை, பாலு, மோகன கிருஷ்ணன், காரத்திகேயன், அய்யப்பமணி, பிரின்ஸிலா பாண்டியன், வேல்முருகன், மாரப்பன், செல்வம், அருணாச்சலம், அய்யாவு, அசோக், கதிரவன், சிவசுப்ரமணியன், வரதன், தாளை முத்தரசு உள்ளிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் பார்வையாளராக உத்தர்காண்ட் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி காண்ட்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த 25 பேரில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு தேர்தல் வரும் 29 ம் தேதி நடைபெறுகிறது.

தலைவர் பதவிக்கு ஆர்.சி.பால்கனகராஜ், அமலராஜ் ஆகியோர் முறைப்படி தாக்கல் செய்தனர்.

துணைத்தலைவர் தேர்தலில் சிவசுப்ரமணியன், வேல்முருகன், கார்த்திகேயன் ஆகியோர் தாக்கல் செய்தனர்

அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு பால்கனகராஜ், பிரபாகரன், செல்வம், விடுதலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.