சென்னை: கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி மீது புகார் அளித்தார்.
இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ராமநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், புகாரில் சிக்கிய வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி, தமிழ்நாடு பார் கவுன்சிலுக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும்வரை வழக்கறிஞர் முனியசாமி வழக்கறிஞராகப் பணிபுரிய தடைவிதித்து, தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் இன்று (டிசம்பர் 27) உத்தரவிட்டுள்ளது. அதில், அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராக அவருக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை; நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்காது - நீதிபதி எச்சரிக்கை