ETV Bharat / state

தமிழ்நாட்டில் புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு வரவேற்பு! - புகையிலை தடை

சென்னை: தமிழ்நாட்டில் புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Ban on Manufacture  storage  transport  distribution or sale of smokeless tobacco in TN  smokeless tobacco in TN  tobacco  Cyril Alexander  புகையிலை தடை  சிரில் அலெக்ஸாண்டர்

author img

By

Published : Jun 2, 2020, 7:09 AM IST

இது குறித்து சிரில் அலெக்ஸாண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகையிலை பயன்படுத்துபவர்கள் கோவிட் -19 தொற்று நோயிக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பொது இடத்தில் துப்புவது கோவிட்-19 இன் பரவலை அதிகரிக்கும்.

மேலும், புகை அல்லாத புகையிலை பொருள்கள், பான் மசாலா, குட்கா மற்றும் பிற புகையிலை பொருள்களை மென்று உமிழ்ந்து பொது இடத்தில் எச்சில் துப்புவதால் காசநோய், ஹெபடைடிஸ், இன்ஃப்ளூயன்ஸா, பன்றிக் காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்கள் பரவுகின்றன.

நிமோனியா, இரைப்பை குடல் நோய்கள், கரோனா வைரஸ் (COVID-19) மற்றும் பிற தொடர்ச்சியான தொற்று நோய்களும் உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புகையிலைக்கு தடை உள்ளிட்ட உத்தரவை அமல்படுத்துமாறு அனைத்து மாநில செயலாளர்களுக்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன் விளைவாக, தமிழக அரசு புகையிலை உற்பத்தி, சேமிப்பு, பொருள் இடமாற்றம் (போக்குவரத்து), விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதித்து ஒரு பயனுள்ள உத்தரவை கொண்டு வந்துள்ளது.

கோவிட்-19 போன்ற தொற்றுநோய் நெருக்கடி காலத்தில் இது முக்கியமான ஒன்று. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் வெகுவாக வரவேற்று பாராட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'புகையிலை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்' - ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.