சென்னை: இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்த குழுதான் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும். இதனால் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டபேரவைகளில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க பயன்படுத்த இருக்கும் வாக்குபெட்டிகள் மற்றும் ஆவணங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிலுவலர்கள் பெற்றனர். பின்னர் பாலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வாக்கு பெட்டிகளையும், ஆவணங்களையும் சென்னை கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான வாக்குபெட்டிகளை, கார் மூலம் சென்னை தலைமைச் செயலகத்திற்கு கொண்டு சென்றனர். அதேபோல் புதுச்சேரிக்கான வாக்கு பெட்டிகள் மற்றும் ஆவணங்கள், கார் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முனுசாமி, “வருகிற 18ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டியை டெல்லியிலிருந்து வாங்கி வரப்பட்டது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் பலத்த பாதுக்காப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுபினர்கள் வாக்களிப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க:பத்திரிகையாளர் சந்திப்பில் சீறிய நெல்லை எம்.பி!