ETV Bharat / state

’வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவே இருக்கும்’ - பாலச்சந்திரன்

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பாகவே இருக்கும் என்றும், அரபிக்கடல், வங்கக் கடல் இரண்டிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டதால் கனமழை பெய்து வருவதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 26, 2021, 4:05 PM IST

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய நாளான அக்டோபர் 26ஆம் தேதியை ஒட்டி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனவும், பருவமழையின் தாக்கம் இயல்பாகவே இருக்கும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு - வட கிழக்குப் பருவமழை வேறுபாடு

நமது ஈ டிவி பாரத் ஊடகத்திடம் பேசிய அவர், "தென்மேற்குப் பருவமழைக்கும் வடகிழக்குப் பருவமழைக்கும் அதிக வேறுபாடு உள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 60 விழுக்காடு மழையும், உள் மாவட்டங்களில் 50 விழுக்காடு மழையும் வடகிழக்குப் பருவமழையின்போது கிடைக்கிறது.

'வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்'

வளர்ச்சியடைந்த தொழில் நுட்பம்

10 ஆண்டுகளுக்கு முன்பு வானிலை ஆய்வு மையத்தில் தொழில்நுட்பம் போதுமானதாக இல்லை. ஆனால் இப்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் உள்ளிட்ட அனைத்து கடல் சார்ந்த நிகழ்வுகளை துல்லியமாக சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது" என்றார்.

கேரள கனமழை

கேரளாவில் அதிக கனமழை பெய்ததை வானிலை ஆய்வு மையம் சரியாகக் கணிக்கவில்லை என்ற கேள்வியை மறுத்த அவர், "அந்த மாநிலத்துக்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே ரெட் அலெர்ட் கொடுத்துள்ளனர்" என்றார்.

வானிலை ஆய்வுத்துறைக்கும் அந்தந்த அரசுக்கும் நல்ல உறவு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அரசுக்கு வானிலை சம்பந்தப்பட்ட செய்திகளை அனுப்பி வருகிறது. இதனால் வானிலை ஆய்வுத்துறைக்கும் அரசுக்கும் நல்ல உறவு உள்ளது" என்றார்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வடகிழக்குப் பருவமழை குறித்து விளக்கிய அவர், "பொதுவாக தென்மேற்குப் பருவமழை முடிய உள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் கடலில் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

இந்த ஆண்டு அரபிக்கடல், வங்கக் கடல் இரண்டிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டதால் கனமழை பெய்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.