ETV Bharat / sports

புலம்பும் ஐதராபாத்.. திட்டம் போட்டு வாங்கிய டெல்லி... நடராஜனை வைத்து மாஸ்டர் பிளான் போடும் ஹேமங் பதானி!

ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் நடராஜனை தவறவிட்டது பெரிய இழப்புக்கு என சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
T Natarajan - Hemang Badani (@IPL)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

ஜெட்டா: 18வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஏலத்தில் தமிழக வீரர் நடராஜனை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

முன்னதாக நடராஜனை ஏலத்தில் எடுப்பதில் சன்ரைசஸ் ஐதராபாத் - டெல்லி கேபிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி அவரை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் தயாரிப்பான ஸ்ரேயாஸ் ஐயரை 11 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய போதும், நடராஜனை கோட்டை விட்டதை அந்த அணி பேரிழப்பாக கருதுவதாக கூறப்படுகிறது.

இது தவிர முகமது ஷமி (ரூ.10 கோடி), ஹர்சல் பட்டேல் (ரூ.8 கோடி) உள்ளிட்ட 8 பேரை முதல் நாள் ஏலத்தில் ஐதராபாத் அணி வாங்கிய போதும், அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளருக்கான வெற்றிடத்தை அணி நிர்வாகத்தால் நிரப்பப் முடியவில்லை என பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி, ஹர்சல் பட்டேல், இஷான் கிஷன் ஆகியோரை அதிக தொகை கொடுத்த வாங்கிய காரணத்தாலும், நடராஜனுக்கு பெரிய தொகையை ஒதுக்க அணி நிர்வாகத்தால் முடியாததாலும் ஏலத்தில் அவரை இழக்க வேண்டி இருந்ததாக டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். அதேநேரம் டெல்லி அணி, இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை 11.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய போதும் மீண்டும் மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரை வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அணி நிர்வாகம் அதிக தொகை கொடுத்து மிட்செல் ஸ்டார்க்கை வாங்கிய நிலையில், 10.75 கோடி ரூபாய் கொடுத்து நடராஜனை வாங்க அணி பயிற்சியாளர் ஹேமங் பதானியே காரணம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவரான ஹேமங் பதானி, நடராஜனின் பவுலிங் ஸ்டைல் உள்ளிட்டவைகளே கருத்தில் கொண்டே ஏலத்தில் எடுத்து இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் நடராஜன் இருந்த போதிலும் அவரிடம் உள்ள பெரிய பிரச்சினை என்றால் அடிக்கடி காயம் ஏற்படுவது. கடந்த சீசனில் காயம் காரணமாக முதல் சில ஆட்டங்களில் விளையாடாத நடராஜன் பின்னர் களமிறங்கி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: IPL Auction: சென்னை அணியில் மீண்டும் அஸ்வின்! வேற யார்ரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.