ETV Bharat / state

'மாண்டஸ் புயல் வலுவிழந்து நிலைகொண்டுள்ளது' - பாலச்சந்திரன் விளக்கம்

மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்து, புயலாக சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 9, 2022, 3:50 PM IST

பாலச்சந்திரன்
Etv Bharat

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் 'மாண்டஸ்' புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்து, புயலாக சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதுதொடர்ந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று இரவில் இருந்து நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கான எச்சரிக்கையினைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்றுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், வட கடலோர தமிழ்நாடு பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரையில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சமயங்களில் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மாலை முதல் நாளை அதிகாலை வரை 65 முதல் 75 கிலோ மீட்டர் வரையும், சமயங்களில் 85 கிலோமீட்டர் வேகத்திலும், பின்னர் நாளை காலை நேரத்தில் படிப்படியாக அதிகாலை முதல் 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் குறைந்து, நாளை மாலையில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும். மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

'மாண்டஸ் புயல் வலுவிழந்து நிலைகொண்டுள்ளது' - பாலச்சந்திரன் விளக்கம்

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறையும். வட தமிழ்நாடு உள்பகுதி மற்றும் ராயலசீமா (ஆந்திரா) பகுதிகளில் நாளை (டிச.10) கனமழை பெய்யும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.