ETV Bharat / state

அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் - எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின்

author img

By

Published : Aug 26, 2021, 5:33 PM IST

Updated : Aug 26, 2021, 6:30 PM IST

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை மீரா மிதுன் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில் நடிகை மீராமிதுன் சமூக வலைதளங்களில் தனது பெயரையும், புகைபடத்தையும் தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மீராமிதுன் மீது எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தோர் குறித்து இழிவாக பேசி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட புகாரில் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுனை எம்.கே.பி நகர் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்வதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்று நேற்று கைது செய்தனர்.மேலும் மீரா மிதுனை விசாரணை செய்ய இரண்டு நாட்கள் போலீஸ் காவல் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின்
அதனடிப்படையில் ஏற்கனவே சிறையில் இருக்கும் மீரா மிதுனை இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10வது எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் அனுமதி

அப்போது மாஜிஸ்திரேட் லட்சுமியிடம் வழக்கு தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என மீரா மிதுன் கேட்டார். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஜோ மைக்கேல் பிரவீன் மீது முதலில் தான் புகார் அளித்ததாகவும், அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜாமின்

பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் சார்பில் ஜாமின் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் போலீஸ் காவல் கேட்கும் அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறி, ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் போலீசாரின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து மீரா மிதுன் பலத்த பாதுகாப்போடு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க :ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல், பீர் பாட்டில் உடைப்பு- மைசூருவில் காதலன் முன்னே காதலி கூட்டு பாலியல் வன்புணர்வு!

Last Updated : Aug 26, 2021, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.