சென்னை: பிஎட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்,விண்ணப்பம் செய்வதற்கான தேதி, கலந்தாய்வு துவங்கும் தேதி ஆகியவற்றை கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பி.எட்., படிப்புகளுக்கு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 ந் தேதி வரை https://www.tngasaedu.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு துவங்கும்.
அனைத்து வகை கல்லூரிகளிலும் பி.எட்., மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட உள்ளது. இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
பி.எட்., படிப்பில் சேர விரும்பும் பட்டியலினத்தவர்கள் 40 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம், பொதுப்பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.
இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் பி.எட்.,சேரலாம்.
அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர www.tngasaedu.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CBSE வாரியத்தில் அதிகாரி பணியிடங்கள்