ETV Bharat / state

46-வது சென்னை புத்தக காட்சி; 1000 அரங்குகள், 50 லட்சம் பேர் வரை வரலாம் - பபாசி தகவல் - சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் இடம்

சென்னையில் ஜனவரி 6-ல் நடக்க உள்ள 1000 அரங்குகளுடனான புத்தக கண்காட்சிக்கு (46th Chennai International Book Fair) இந்தாண்டு 50 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும்; புத்தக கண்காட்சியையொட்டி, 9 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் பபாசி அமைப்பின் தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 4, 2023, 5:00 PM IST

சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்க உள்ள 46ஆவது புத்தகக் காட்சி (46th Chennai International Book Fair) குறித்து பபாசி அமைப்பின் தலைவர் வைரவன், செயலாளர் முருகன் ஆகியோர் இன்று (ஜன.4) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 46ஆவது சென்னை புத்தகத் திருவிழாவை வரும் ஜனவரி 6ஆம் தேதி மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்.

1000 புத்தக அரங்குகள்: இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தினசரி காலை 11 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை நடைபெறும். கடந்த ஆண்டு 800 அரங்குகளாக இருந்தது. இந்த ஆண்டு, 200 அரங்குகள் அதிகப்படுத்தப்பட்டு மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் நடைபாதைக்கான வழி குறைவாக இருக்கும்.

தமிழக அரசு சார்பில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்காக 30 முதல் 40 அரங்குகள் வரை அமைக்கப்பட்டுள்ளது.

9 பேருக்கு விருதுகள்: இந்த புத்தக காட்சிக்கு, அரங்குகள் கேட்ட அனைவருக்கும் எங்களால் கொடுக்க முடியவில்லை. முடிந்த வரை கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டு வரை பபாசி சார்பில் 7 விருதுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில், இந்த ஆண்டு 2 விருதுகள் கூடுதலாக சேர்த்து 9 விருதுகள் வழங்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் 'கலைஞர் பொற்கிழி விருது' (kalaignar Porkizhi Award) 6 பேருக்கு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர், 'கலைஞர் விருது' (kalaignar Award) பெறுபவர்களுக்கு சில்வர் கேடயம் மற்றும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். இந்த ஆண்டு குறைவான புத்தகங்கள் வைப்பவர்களுக்காக மினி ராக் சிஸ்டம் அதிகப்படுத்தி இருக்கிறோம். தொடர்ந்து, 100 பேர் அளவுக்கு மினி ராக் சிஸ்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்காட்சிக்கு 50 லட்சம் பேர் வரலாம்: புத்தகங்கள் வாங்குவோர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது நெட்வொர்க் பிரச்னை ஏற்படாமல் இருக்க பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் போன்ற மூன்று நெட்வொ்க்குகளின் வைஃபை (WiFi) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மற்றொரு சிறப்பாக குழந்தைகளுக்கு என்று பிரத்யேக அரங்கை வடிவமைக்கிறோம். அவர்களுக்கான புத்தகங்களை அங்கேயே வாங்கிக்கொள்ளலாம். கடந்த ஆண்டு 30 லட்சம் பேர் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர். இந்த ஆண்டு கூடுதலாக, 50 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

சர்வதேச புத்தக கண்காட்சி அமைப்பதன் முக்கிய நோக்கம் அயல் நாடுகளுக்கு நம் புத்தகங்களை, கலாசாரங்களை கொண்டு செல்லவும், வெளிநாட்டு கலாசாரங்களை தெரிந்துகொள்ளவும் தான். பபாசி அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்து செயல்பட தலைவர் வைரவனின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பபாசி உறுப்பினர்களுக்காக புத்தக பூங்கா இடம் தருவதாக கடந்த ஆண்டே அரசு அறிவித்தார்கள். இந்த ஆண்டு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்கள்.

இதையும் படிங்க: இஸ்ரோ, நாசா இணைந்து செய்யும் செயற்கைக்கோள்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.