சென்னை எழிலகத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பொன்னையன் தலைமையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்து பயிலரங்கு நடைபெற்றது.
இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறை, மக்கள் நல்வாழ்வு துறை, வேளாண்மை துறை, உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை, கல்வித்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர். இ.ஆ.ப., உறுப்பினர் செயலர், மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு அனில் மேஷ்ராம், இப்பயிலரங்கின் நோக்கத்தினையும், ஊட்டச்சத்து அளிப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
ஊட்டச்சத்து அளிப்பதில் உள்ள சவால்களையும், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் விளக்குவதே இப்பயிலரங்கின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதில் துறை அலுவலர்களும், துறை வல்லுநர்களும், தங்களது கருத்துகளை விளக்கினர்.
தற்போது அச்சுறுத்தி வரும் கோவிட்-19 நோய் தொற்றை எதிர்கொள்ள தேவையான பாரம்பரிய உணவு வகைகள், ஆலோசனைகளை முறையாக கடைபிடித்து உடல் உறுதியை மேம்படுத்தவும் பொது மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு அளித்தல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன.