இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் தற்போது மழை பெய்துவரும் நிலையில், டெங்கு காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டின் அருகிலுள்ள உபயோகமற்ற டயர்கள், தேங்காய் ஓடு, தேவையற்ற நெகிழிப் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் கொசு புழு உற்பத்தியாகாமல் இருப்பதற்கு, வீடுகளிலுள்ள தண்ணீர் சேமிக்கும் குடங்கள், பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவற்றை நன்றாக மூடிவைக்க வேண்டும். குடிநீர் தொட்டியை வாரம் ஒருமுறை பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களுக்குச் சென்று மருந்தை வாங்கி சாப்பிடக் கூடாது. எனவே இதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் காய்ச்சல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சைப் பெற வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்கும் நோக்குடன் சுகாதாரத் துறையும் உள்ளாட்சித் துறையும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தத் திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் பீதி
டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள காவலர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்