ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், தேவி ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (38). மளிகை கடை வைத்து நடத்திவரும் இவர், தனது வீட்டருகே இரும்பு செட் அமைத்து ஆடுகளையும் வளர்த்துவருகிறார்.
நேற்று (டிச. 20) இரவு ராமசாமி ஆடுகளுக்கு தீவனங்களை கொடுத்துவிட்டு செட்டை மூடினர். காலை அவர் மீண்டும் அங்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு செட் திறந்து கிடந்தது.
உள்ளே இருந்த மூன்று ஆடுகள், மூன்று ஆட்டுக் குட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க... தன்பாலுறவுக்கு வற்புறுத்திய பொறியாளர் கொலை: வடமாநில இளைஞர் கைது