சென்னை: ஆவடி கவச வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட 7 பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களை பாரத பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர், ”வலுவான இந்தியாவை உருவாக்குவதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளில் இதனைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் வரும் காலங்களில், ஆவடி கவச வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களும் இந்தியாவின் ராணுவத்தை வலுப்படுத்தும் முக்கிய தளங்களாக மாறும். சுதந்திர போராட்டத்திற்கு பிறகு பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது ராணுவத் துறை அதிக வெளிப்படைத்தன்மை நம்பிக்கை மற்றும் தொழில் நுட்பத்துடன் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு ஜான் வர்கீஸ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நான் முழு நேரத் தலைவர்; ஊடகத்திடம் பேசுவதை நிறுத்துங்கள்; மறுமலர்ச்சிக்கு ஒற்றுமை தேவை- சோனியா காந்தி!