ETV Bharat / state

கட்டண உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்! - போராட்டம்

சென்னை: செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மாதாந்திர கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியதை கண்டித்து வாடகை வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
author img

By

Published : Apr 5, 2019, 11:42 PM IST

செங்குன்றம் பாடியநல்லூரை அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் ஆட்டோ, வேன்களுக்கு மாதாந்திர கட்டணம் 10 கி.மீ.க்கு ரூபாய் 150 வசூலித்து வந்ததாக தெரிகிறது.

ஆனால், இப்பொழுது சுங்கச்சாவடியின் ஒப்பந்ததாரர் மாறியதால் அவர்கள் மாத சுங்க கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது, 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள லோடு ஆட்டோக்களுக்கு மாத கட்டணமாக ரூபாய் 150லிருந்து இரண்டு ஆயிரத்து 650 ரூபாய் உயர்த்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என ஓட்டுநர்கள் அனைவரும் சுங்கச்சாவடி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த சோழவரம் காவல் துறையினர் ஓட்டுநனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் நாளை மீண்டும் பேசலாம் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்ததால் ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.

இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Intro:செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மாதந்திர கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியது கண்டித்து வாடகை வேன் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்.

Body:செங்குன்றம் பாடியநல்லூரை அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் ஆட்டோ மற்றும் வே ன்களுக்கு மாதாந்திர கட்டணம் 10 கிலோ மீட்டருக்குள் ரூபாய் 150 வசூலித்து வந்ததாக தெரிகிறது.இப்பொழுது சுங்கச்சாவடியின் ஒப்பந்ததாரர் மாறியதால் அவர்கள் மாத சுங்க கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியதாக தெரிகிறது.அதாவது 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மற்றும் லோடு ஆட்டோக்களுக்கு மாத கட்டணமாக ரூபாய் 150 லிருந்து 2,650 ரூபாய் உயர்த்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என ஓட்டுனர்கள் அனைவரும் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சோழவரம் போலீசார் ஓட்டுனருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் நாளை மீண்டும் பேசலாம் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளதால் ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

Conclusion:இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.