சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் (43). டிசம்பர் 3ஆம் தேதி இவர் தனது 13 வயது மகளை காணவில்லை எனவும் கண்டுபிடித்து தரக்கோரியும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இரண்டு நாட்களாகியும் காவல் துறையினர் அவரது மகளை கண்டுபிடிக்கவில்லை. இதனால் இன்று (டிச.5) சீனிவாசன் சேலையூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
![ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-selaiyur-autodriver-issue-visual-script-7208368_05122020152849_0512f_1607162329_752.jpg)
இதையடுத்து 50 சதவீத தீக்காயங்களுடன் இவருந்த அவரை காவல் துறையினர் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது தந்தையின் இச்செயலுக்கு பின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளிப்பு வழக்கு - மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றம்!