மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (40). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை பார்த்து மெதுவாக செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் வாகனத்தை நிறுத்தி விட்டு சதீஷின் அருகில் வந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற மயிலாப்பூர் காவல்துறையினர் சிகிச்சைப் பெற்று வந்த சதீஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.