ETV Bharat / state

நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலி - காவல் துறையினர் விசாரணை - காவல்துறை விசாரணை

சென்னை : புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்திலிருந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Auto driver killed after falling from fourth floor - Police investigation!

author img

By

Published : Sep 29, 2020, 9:17 PM IST

சென்னை : பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எல்லப்பன் (வயது 35). இவருக்கு இளவரசி என்ற மணைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், நேற்று (செப்.28) இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த எல்லப்பன் ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். பின்னர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து தொலைபேசி மூலம் எல்லப்பன் இறந்து விட்டதாக அவரது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக்கேட்ட அவரது மனைவியும் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்து சிட்லபாக்கம் காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று விசாரித்தபோது பல்லாவரம் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடத்தில் நான்காவது மாடியில் இருந்து எல்லப்பன் கீழே விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இறந்தவர் கொலை செய்யபட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு : உறவினர்கள் தர்ணா போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.