சென்னை வடபழனி பஜனை கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ(50). இவர் இன்று அதிகாலை வழக்கம் போல் சவாரிக்குச் சென்றார். அப்போது, அருணாச்சலம் என்பவரை ஆட்டோவில் அழைத்துகொண்டு லஷ்மண் ஷ்ருதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ உயிரிழந்தார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த அருணாச்சலம் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறையினர் இளங்கோவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், லாரி ஓட்டுநர் தீனதயாளன் (29) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மீதான வழக்கு - சாட்சிக்கு வந்த கிரிஜா வைத்தியநாதன்!