ETV Bharat / state

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவர் மீது தாக்குதல் - இருவர் கைது! - காவல்துறையினர் விசாரணை

சென்னை: பொழிச்சலூர் அருகே கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவரை அடித்து உதைத்த இரு இளைஞர்களைக் கைது செய்த காவல் துறை, அவர்களை புழல் சிறையில் அடைத்தது.

attacker-who-demanded-a-refund-two-arrest

author img

By

Published : May 27, 2020, 1:58 AM IST

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் (26). இவர் கடந்த 7 ஆண்டிற்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். பொழிச்சலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, சென்னையில் உள்ள பல சலூன் கடைகளில் வேலை பார்த்து வந்த இவர், தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பொழிச்சலூர் பகுதியிலேயே சலூன் கடையை ஆரம்பித்துள்ளார்.

அவரின் கடைக்கு வாடிக்கையாளராக வரும் மணிகண்டன் (26) என்பவர், தான் சொந்தமாக காய்கறி கடை ஆரம்பிக்க வேண்டும் என 20,000 ரூபாயை கடனாகக் கேட்டுள்ளார். அதனை நம்பிய சங்கரும் தனது தங்க மோதிரத்தைக் கழட்டி, இதனை வைத்துக் கடை ஆரம்பித்துக்கொள் என்று கொடுத்துள்ளார்.

இதனிடையே, கரோனா காரணமாக ஊரடங்கு நீடிப்பதால், சலூன் கடையை திறக்காமல் இருந்து வருமானம் இல்லாமல் தவித்த சங்கர், மணிகண்டனிடம் தனது மோதிரத்தைத் திருப்பித்தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால், மணிகண்டன், மோதிரத்தைத் தரமுடியாது என்றும், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றும் சங்கரிடம் ஏமாற்றும் தொனியில் மிரட்டலாகப் பேசியுள்ளார்.

இதையடுத்து சங்கர், காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, காவல் துறையினர் மணிகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பரான விதுஷனுடன் இணைந்து சங்கரை அடித்து, உதைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

பின் இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கரை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின் மீண்டும் மணிகண்டனைத் தொடர்பு கொண்ட காவல் துறையினர், 'உன் மீது வழக்கு எதுவும் பதியமாட்டோம்’ என்று நாசுக்காக பேசி, மணிகண்டனை காவல்நிலையம் வரவழைத்துள்ளனர்.

இதனையடுத்து காவல் நிலையம் வந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் விதுஷனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணிகண்டன் இது போல் பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட இடங்களிலும் பிறரிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டால் மிரட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மணிகண்டன், விதுஷனை கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைத்தனர்.

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட நபரை, கடன்வாங்கிய நபர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;கிணற்றில் குளிக்கச் சென்ற இருவர் சந்தேக மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.