ETV Bharat / state

இறுதி ஊர்வலத்தின் போது நடுரோட்டில் சேவல் சண்டை; தட்டிக்கேட்ட பெண் போலீஸ் மீது தாக்குதல் - அயனாவரம் காவல்துறையினர்

இறுதி ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறாக சேவல் சண்டை விட்ட நபர்களை தட்டிக்கேட்ட பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இறுதி ஊர்வலத்தின் போது நடுரோட்டில் சேவல் சண்டை

author img

By

Published : Jan 27, 2023, 7:01 AM IST

இறுதி ஊர்வலத்தின் போது நடுரோட்டில் சேவல் சண்டை;

சென்னை: அயனாவரம் உதவி ஆய்வாளர் மீனா, காவலர் திருநாவுக்கரசு மற்றும் காவலர் சூர்யா பிரகாஷ் ஆகியோர் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அயனாவரம் வாட்டர் டேங்க் சாலை வழியாக ரோந்து வருகையில், அந்த பகுதியில் ரவி என்பவரது இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ஊர்வலத்துடன் வந்த சில நபர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து சேவல் சண்டை விட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட காவலர் திருநாவுக்கரசு கீழே இறங்கி சாலையை மறித்து, சேவல் சண்டை விடுவதை செல்போனில் வீடியோ எடுத்த போது, அங்கிருந்த நபர்கள் ஏன் செல்போனில் வீடியோ எடுக்கிறீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டு காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

காவலரை தாக்குவதை கண்ட பெண் உதவி ஆய்வாளர் மீனா தடுக்க வந்த போது அவரையும் அந்த கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அயனாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு காவல்துறையினரை தாக்கிய இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் காவல்துறையினரை தாக்கிய நபர்கள் அயனாவரம் சோலையப்பன் கோயில் தெருவை சேர்ந்த மெட்ரோ வாட்டர் சூப்பர்வைசர் சஞ்சய் (20) மற்றும் டிராவல்ஸ் டிரைவர் குணசேகரன் (35) என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே குணசேகரன் மீது அயனாவரத்தில் சண்டை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. காயமடைந்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் பொருட்களை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.