ETV Bharat / state

நடிகை நயன்தாராவின் திருமணம் நிறைவு: கடைசி வரை காத்திருந்த அட்லீ..! - today actress nayan vs director Vignesh Sivan married over

திருமணம் முடிந்த பிறகு நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணையருடன் குழு புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த பவுன்சர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நடிகை நயன்தாராவின் திருமணம் நிறைவு:கடைசி வரை காத்திருந்த அட்லி..!

author img

By

Published : Jun 9, 2022, 6:12 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகையர் பலரும் வருகை தந்திருந்தனர். குறிப்பாக நடிகர் சரத்குமார், விஜய் சேதுபதி, சூர்யா-ஜோதிகா, எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு தாலியை அணிவிப்பதற்கு முன்பாக குடும்பத்துடன் வருகை தந்த திரைப்பிரபலங்கள் அனைவரும் தாலியைத் தொட்டு ஆசீர்வதித்தனர். அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நயன்தாராவின் திருமணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் பாதுகாவலர்களான பவுன்சர்கள் 80 பேர் வரை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

என்றாலும் விடுதியினுள் நுழைந்தவுடனேயே பவுன்சர்களின் அலைபேசிகள் வாங்கி வைக்கப்பட்டதுடன், நயன்தாராவின் திருமணம் நடைபெற்ற அரங்கிற்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருமண அரங்கினுள் முன்னணி நடிகர், நடிகையர், திருமண இசைக்கலைஞர்கள், தனியார் ஓடிடி நிறுவன ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணையருடன் குழு புகைப்படம் எடுக்க வாய்ப்புக் கிடைக்கும் என காத்திருந்த பவுன்சர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நயன்தாராவின் திருமணம் நிறைவடைந்தவுடன் திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து புறப்பட்டுச்சென்றபோதும் இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் இருவரும் நீண்ட நேரம் காத்திருந்து இறுதியாக புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:நயன்தாரா திருமண மெனு: அதென்ன காதல் பிரியாணி? - இணையத்தை சலிக்கும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.