தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் உதவியுடன் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வந்த ரயிலை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து வந்த ஹர்ஷன் ராம் என்பவரின் உடமைகளைச் சோதனை செய்தபோது, அதில் 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணத்தைப் பறிமுதல்செய்தனர். பின்னர் பறிமுதல்செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து அந்நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் மிதிவண்டி திருடிய கேரள இளைஞர்கள் கைது!