சென்னை தாம்பரத்தை அடுத்த புலிகொரடு மலையடிவாரப் பகுதியில் சென்னைக்குக் குடிநீர் வழங்கப்படும் வீராணம் ஏரியின் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழாய் அடியிலிருந்து மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்ததால் வாகனங்கள் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
இதைப்பார்த்த அங்குள்ள பொதுமக்கள் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
மேலும் இதுகுறித்து நடத்தபட்ட விசாரணையில் அங்கு கொட்டப்பட்ட நெகிழிப் பொருள்கள், உபயோக்கப்படாத எலெக்ட்ரிக் பொருள்கள் ஆகியவையே தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விபத்து ஏற்படுத்திய இடத்திலேயே செல்ஃபி - லம்போர்கினி காரரின் சேட்டை