வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தட்சிணாமூர்த்தி காவலர் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 110 காவலர் குடும்பங்கள், துணை ஆணையர் குடியிருப்பு, உதவி ஆணையர் குடியிருப்புகள் உள்ளன. இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, குடியிருப்புப் பகுதியில் உள்ள காவலர் குடும்பங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இதனையடுத்து குடியிருப்புப் பகுதி முழுவதும் உள்ள குப்பைகளை துணை ஆணையர் சுப்புலட்சுமி, தண்டையார்பேட்டை உதவி ஆணையர் முத்துக்குமார், பெண் காவலர்கள், ஆண் காவலர்கள் அகற்றினர். இதேபோல் வண்ணாரப்பேட்டை தங்கச்சாலை காவலர் குடியிருப்புப் பகுதியில் நேரில் சென்று காவலர்கள் குடும்பத்தினருக்கு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடியிருப்புப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று காவலர்கள் அறிவுரை வழங்கினர்.
இதையும் படிக்கலாமே: டெங்குவிற்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு: பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் அபராதம்