இது குறித்து அவர் பேசும்போது, ’அணைப் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் கீழ் நிர்வகிக்கப்படும் அணைகளின் உரிமையைப் பறிக்கக் கூடும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது.
மேலும், தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன.
மத்திய அரசு கொண்டுவரும் புதிய மசோதாவின்படி இந்த நான்கு அணைகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வழிவகை உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வரை அணை பாதுகாப்பு சட்ட மசோதாவினை நிறைவேற்றக்கூடாது என தமிழ்நாடு அரசு பிரதமருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.
பெருவரிப்பள்ளம், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னக்கடவு உள்ளிட்ட அணைகளின் மீதான உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாடு அரசு மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அதிமுக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’ எனத் தெரிவித்தார்.