ETV Bharat / state
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்
சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
tamilnadu assembly
By
Published : Jul 20, 2019, 12:13 PM IST
| Updated : Jul 20, 2019, 12:39 PM IST
அதன் விவரம் பின்வருமாறு,
கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு, தற்போது வழங்கப்படும் குடும்ப நல நிதியானது இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கூட்டுறவு பொதுவிநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, குடும்ப நல நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் முன்பணமானது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் படியானது, 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களின் மாத ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை மூலம் வரவு வைக்கப்படும்.
கால்நடை பராமரிப்புத் துறை:
தமிழ்நாட்டில் 3,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 3 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
5,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்கள், தலா 14 லட்சம் ரூபாய் வீதம் 3.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
ஐந்து கால்நடை மருந்தகங்கள் தலா 50 லட்சம் ரூபாய் வீதம், 2.50 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
இரண்டு கால்நடை மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள் தலா 1.20 கோடி ரூபாய் வீதம், 2.40 கோடி ரூபாய் செலவில், 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை
தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர்களால் எம்கேடி என அன்புடன் அழைக்கப்படும் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் அவருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறையில் முக்கிய பங்காற்றிய உளுந்தூர் பேட்டை சண்முகம், கவிஞர் நா. காமராசு, முனைவர் இரா. இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டித ம.கோபால கிருட்டிணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ரூ.35 லட்சம் செலவில் நாட்டுடைமையாக்கப்படும்.
தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 01.11.1956ஆம் நாளை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
வாரணாசி இந்து பல்கலைக்கழகம், கவுகாத்தி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் ரூ.36 லட்சம் செலவில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்படும்.
உலக அற இலக்கியமான திருக்குறளின் பெருமையை பரவச்செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஹூப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட ஐரோப்பிய தமிழறிஞர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல்லின் சீரிய தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில், ஒப்பிலக்கண ஆய்வில் தமிழறிஞர்களையும், மாணவர்களையும் நெறிப்படுத்தவும், திராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாகப் பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளவும், “தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும்.
“ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும்

Intro:Body:110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு.
1. கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு, தற்போது வழங்கப்படும் குடும்ப நல நிதி
2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கும்.
2. கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, குடும்ப நல நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் முன்பணம், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
3. கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிப்படி,
2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
4. கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு, அவர்களது மாத சம்பளம், அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படும்
கால்நடை பராமரிப்புத் துறை:
1. தமிழ்நாட்டில் 3,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 3 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
2. 5,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்கள், தலா 14 லட்சம் ரூபாய் வீதம் 3.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
3. ஐந்து கால்நடை மருந்தகங்கள் தலா 50 லட்சம் ரூபாய் வீதம், 2.50 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
4. இரண்டு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் பெரு மருத்துவமனைகள் தலா 1.20 கோடி ரூபாய் வீதம், 2.40 கோடி ரூபாய் செலவில், 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை
தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் எம்.கே.டி. எனவும் அன்புடன் அழைக்கப்படும் திரு. கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் அவர்களின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கபடும்
தமிழ் வளர்ச்சித் துறை
1. உளுந்தூர் பேட்டை திரு. சண்முகம்
2. கவிஞர் நா. காமராசு
3. முனைவர் இரா. இளவரசு
4. தமிழறிஞர் அடிகளாசிரியர்
5. புலவர் இறைக்குருவனார்
6. பண்டித ம. கோபால கிருட்டிணன்
7. பாபநாசம் குறள்பித்தன்
ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
2. தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
4. வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும்.
6. உலக அற இலக்கியமான திருக்குறளின் பெருமையை பரவச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்
8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட ஐரோப்பிய தமிழறிஞர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல் அவர்களின் சீரிய தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில், ஒப்பிலக்கண ஆய்வில் தமிழறிஞர்களையும் மாணவர்களையும் நெறிப்படுத்தவும், திராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாகப் பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளவும், “தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும்.
9. “ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்ட”த்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை:
1. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின ஏழை மாணவ, மாணவியரின் நலனுக்காக இத்துறையின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா இலவச உணவு மற்றும் உறைவிட வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவ, மாணவியரின் வருகையை உறுதி செய்ய, கைரேகை அங்கீகார முறையின் அடிப்படையில், பயோ-மெட்ரிக் கண்காணிப்பு தொழில்நுட்பக் கருவி வழங்குவதன் மூலம் அனைத்து விடுதிகளையும், 3 இயக்ககங்கள், மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் மதுரையிலுள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகங்கள் ஆகியவை விடுதிகளை எளிதாக கண்காணிக்கலாம் என்ற அடிப்படையில் 2 கோடியே 97 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்படும்.
2. தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில், அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 2014-15-ஆம் ஆண்டு முதல் ஒரு விடுதிக்கு தலா
15,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு வந்தது.
2018-19-ஆம் ஆண்டில், 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களில் செயல்படும் 99 கல்லூரி விடுதிகளுக்கு இத்தொகை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
மின் உபகரணங்கள், நீரேற்றும் மின் மோட்டார், நீர்தேக்கத் தொட்டி, பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு, கழிவு நீர் குழாய் மற்றும் தொட்டி ஆகியவற்றில் ஏற்படும் அடைப்புகள், கதவு மற்றும் ஜன்னல்கள், விளையாட்டு உபகரணங்கள், கட்டில்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுது பார்க்கும் பணிகள், அவசர சூழ்நிலைகளில் மாணவர்களுக்கான மருத்துவ செலவினங்களை மேற்கொள்ளுதல் போன்ற செலவுகளுக்கு தற்போது வழங்கப்படுகின்ற முன்பணத் தொகை 15,000 ரூபாய் மற்றும் 20,000 ரூபாயினை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏற்படும் 4 கோடியே 51 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்து வழங்கும்.
3. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மூலம் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு போன்ற கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட அனைத்து திட்டங்களிலும் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் பயிலும் தமிழ்நாடு மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியரிடமிருந்து கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, பட்டியலிடப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு 2 கோடி ரூபாயினை மாண்புமிகு அம்மாவின் அரசு ஒதுக்கீடு செய்து வழங்கும்.
4. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் உள்ள விடுதிகளில், 1,277 விடுதிகள் அரசுக் கட்டடங்களிலும், மீதமுள்ள 71 விடுதிகள் வாடகை கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 25 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுப்பணித் துறையால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள வாடகை கட்டடங்களில் இயங்கிவரும்46 விடுதிகளில், 14 விடுதிகளுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் மாண்புமிகு அம்மாவின் அரசால் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
5. 2019-20- ஆம் ஆண்டில் 2 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், 2 மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் விடுதிகள் மற்றும் 2 சிறுபான்மையினர் விடுதிகள் என மொத்தம் 6 கல்லூரி விடுதிகள், 2 கோடியே 56 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக துவங்கப்படும்Conclusion:
Last Updated : Jul 20, 2019, 12:39 PM IST