ETV Bharat / state

அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரிகள்? அமைச்சர் பதில்

சென்னை: மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள இடத்தில் சட்டக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கைக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்துள்ளார்.

author img

By

Published : Jul 18, 2019, 12:26 PM IST

cv shanmugam

மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள இடத்தில் சட்டக் கல்லூரி தொடங்கலாம் என்ற விதிக்கேற்ப காஞ்சிபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் எழிலரசன் பேரவையில் இன்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘செங்கல்பட்டு, புதுப்பாக்கம் என இரண்டு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகிறது. ஏழை மாணவர்கள் சட்டப்படிப்பை பெற கல்லூரி அமைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு கூறியது. சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரிகள் அமைக்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் அரசு சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்தவுடன் விழுப்புரம் சட்டக்கல்லூரி திறக்கப்படும். உறுப்பினர் கேட்ட பகுதியில் சட்டக்கல்லூரி அமைக்க சட்டக்கல்வி இயக்குநர் பரிந்துரை செய்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Intro:Body:மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள இடத்தில் சட்ட கல்லூரி துவங்கலாம் என்ற விதிக்கேற்ப காஞ்சிபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செங்கல்பட்டு, புதுப்பாக்கம் என இரண்டு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகிறது. அரசு ஏழை மாணவர்கள் சட்டப்படிப்பை பெற கல்லூரி அமைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு கூறியது.

சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரிகள் அமைக்கலாம் என சட்டத் திருத்த கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் அரசு சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் சட்டக்கல்லூரி இந்த சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் திறக்கப்படும்

உறுப்பினர் கேட்ட பகுதியில் சட்டக்கல்லூரி அமைக்க சட்டக்கல்வி இயக்குனர் பரிந்துரை செய்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.