ETV Bharat / state

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கொடுக்க வேண்டும்  - கோமதி மாரிமுத்து

சென்னை: தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கொடுக்க வேண்டும் என ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து வேண்டுகொள் விடுத்தார்.

தமிழ்நாட்டில் உள்ளவருக்கு இங்கே வேலை கொடுக்க வேண்டும் -கோமதி மாரிமுத்து கோரிக்கை!
author img

By

Published : Apr 27, 2019, 5:40 PM IST

Updated : Apr 28, 2019, 7:40 AM IST

ஆசிய தடகளப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சியினர், தனியார் அமைப்புகள் மற்றும் சினிமா பிரபலங்கள் சார்பாக அவருக்கு பரிசு தொகைகள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டன.

இதன்தொடர்ச்சியாக நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கோமதி மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆசிய தடகள போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும், ஆர்வம் இல்லாமல் இருந்த என்னை பயிற்சியாளர் ஊக்குவித்ததால்தான் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே குறிக்கோள் என்றும், தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை கொடுக்க வேண்டும் எனவும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு தமிழக அரசின் சார்பாக வெகுமதியும் வழங்கப்பட்டது..மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் சார்பாக பாராட்டு மற்றும் பரிசு தொகையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு  பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கலை சந்தித்த கோமதி மாரிமுத்து.
ஆசிய விளையாட்டு தடகள போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும்,தன்னுடைய கல்லூரி படிப்பு வரையில் விளையாட்டின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும் கூறினார். 
மேலும் பயிற்சியாளர் மற்றும் தமிழக அரசு தன்னை  ஊக்குவித்ததாகவும் தான் தங்கம் பதக்கம் வெல்ல முக்கிய காரணம் என்றம் கூறினார்.

 இது மட்டுமில்லாமல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே குறிக்கோள் என்றும் கூறினார்.பின் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தமிழகத்திலே வேலை கிடைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைப்பெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் தன்னை பாராட்டியதாகவும் கூறினார்..
Last Updated : Apr 28, 2019, 7:40 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.