ETV Bharat / state

'மைதானம் வேணும்' - அமைச்சர் உதயநிதிக்கு பாக்ஸிங் தங்க மங்கை கோரிக்கை

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கல்லூரி மாணவி நீனா, மைதானம் அமைத்துத் தர உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மைதானம் அமைத்துத் தர உதயநிதியிடம் பதக்கம் வென்ற நீனா கோரிக்கை

author img

By

Published : Dec 20, 2022, 7:31 PM IST

குத்துச்சண்டை மைதானம் அமைத்துத் தர உதயநிதி ஸ்டாலினிடம் பதக்கம் வென்ற மாணவி நீனா கோரிக்கை!

சென்னை: தாய்லாந்தில் ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 20 நாடுகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 45 பேரும் தமிழ்நாட்டிலிருந்து 2 பேரும் கலந்து கொண்டனர். ஒருவர் 2 முறை போட்டியிடலாம் என்ற விதியின் கீழ், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நீனா நீலகண்டன் (19), 50 கிலோ எடைபிரிவில் கலந்துகொண்டு அயர்லாந்து நாட்டு வீராங்கனையிடம் போட்டியிட்டு தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும் ஒரு வெண்கலப் பதக்கமும், சரத் என்பவர் 79 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்தியாவிலிருந்து 1 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கங்கள், 21 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நீனா, பதக்கம் வென்ற வீரர் சரத் ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

குத்துச்சண்டை வீராங்கனை நீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், ’7ஆம் வகுப்பு படிக்கும் போது தற்காப்புக் கலை ஒன்றை கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன் நீட்சியாக கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று மாவட்ட, மாநில அளவில் வென்று, தற்போது ஆசிய அளவில் வென்று உள்ளேன். இது தற்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

காஞ்சிபுரம் மகளிர் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறேன். பயிற்சி மேற்கொள்ள பயிற்சி மைதானம் கட்டித் தர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறுவேன்’ என்றார்.

இதையும் படிங்க: 'ஆத்தீ.... எவ்வளவு பெரிசு' - வீட்டின் அலமாரியில் சென்று சீறிய நாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.