ETV Bharat / state

TNCA தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு!

author img

By

Published : Nov 5, 2022, 2:11 PM IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

TNCA தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு!
TNCA தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு!

இந்திய அளவில் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(TNCA) 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெருமை மிக்க இந்த சங்கத்தின் தலைவர், உதவி செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

தலைவர் பதவியை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரபு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு பிரபு என்பவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அசோக் சிகாமணியின் அணியில் போட்டியிட்ட பழனி என்பவர் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்த ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.