ETV Bharat / state

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை! - engaged groom dies, the teenager commits suicide due to sadness

சென்னை: மதுரவாயல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை
சென்னை
author img

By

Published : Dec 17, 2020, 7:47 AM IST

சென்னை மதுரவாயல் அருகேயுள்ள துண்டலம் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி (48). இவரது மகள் அஸ்வினி (21), நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16) வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

இதனால் பதறிப்போன பெற்றோர், வீட்டின் அருகே உள்ள உறவினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்குச் சென்றபோது வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், அஸ்வினி தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், அஸ்வினிக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பிரகாஷ் சாலை விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த அஸ்வினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சாலை விபத்தில் இறந்த சோகத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.