சென்னை: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் நெறுக்கததின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம், கட்சியை விட்டு நீங்கி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், நேற்று (டிச. 10) அருணாச்சலம் மீண்டும் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அருணாச்சலம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் எடுத்த கொள்கை முடிவில் முரண்பாடு இருந்ததால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். ஆனால் விவசாயிகளுக்கு பல திட்டங்களை கமல்ஹாசன் தான் செய்து வருகிறார் என இப்போது தெரிந்ததால் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை புதிய கட்சியாக பார்க்கவில்லை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கிறது என்பதால் மீண்டும் இணைக்கிறேன். பாஜகவில் இருக்கும் பொழுதும் எனக்கு பல்வேறு பதவிகள் தேடி வந்தது. ஆனால் மனம் அதை ஏற்க மறுத்தது. தற்போது மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நலத்திட்ட உதவி - விடுபட்ட 52 மாற்றத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்!